கான்பூர்:
முன்னாள் பிரதமரும் தனது பாட்டியுமான இந்திரா காந்தியுடன் தன்னை ஒப்பிட முடியாது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, மேற்கு உத்திரப்பிரதேச பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, லக்னோவில் அவருக்கு பேனர்கள் வைத்து காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினார்கள்.
மேலும் பிரியங்கா காந்தியை இந்திரா காந்தியோடு ஒப்பிட்டும் பேசி வருகின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், எனது பாட்டி இந்திரா காந்தியுடன் ஒப்பிடும் அளவுக்கு நான் வளரவில்லை.
மக்களுக்கு எப்படி பணியாற்ற வேண்டும் என ஞானம் இந்திரா காந்தியிடம் இருந்தது. அதே ஞானம் என்னிடமும், என் சகோதரரர் ராகுல் காந்தியிடமும் உள்ளது.
இத்தகைய மக்கள் சேவையை எங்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. எங்களுக்க வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் உங்களுக்காக நாங்கள் சேவை செய்வோம் என்றார்.
பிரியங்கா காந்தி இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லை. பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, இதை உங்கள் சஸ்பென்ஸுக்கே விட்டுவிடுகிறேன். சஸ்பென்ஸ் எப்போது தவறானதாக இருந்ததில்லை என்றார்.