டில்லி :
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று பாராளுமன்றத்தில் பேசினார். சுமார் 1 மணி நேரம் அவர் பேசியபோது, முந்தைய காங்கிரஸ் ஆட்சி குறித்தே விமர்சனம் செய்தார்.
இதற்கு பதில் அளித்த சோனியாகாந்தி, மோடியின் இன்றைய நாடாளுமன்ற பேச்சு வெறும் பேச்சுக்கள் என்று கூறினார்.
இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சத்தமிட்டனர். இதன் காரணமாக கோபமடைந்த மோடி, மேலும் உரக்கவும், கோபமாகவும் பேசினார்.
மோடியின் இன்றைய நாடாளுமன்ற உரைகுறித்து கருத்து தெரிவித்த ராகுல், மோடி தான் பிரதமர் என்பதையே மறந்து பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல அரசியல் பேசுகிறார் என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில, மோடியின் உரை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சோனியாகாந்தி கூறியதாவது
பிரதமரின் உரையில் புதிதாக ஒன்றும் இல்லை. மக்கள் வேலை வாய்ப்புகளையே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மோடி சொற்பொழிவு ஆற்றி வருகிறார். மக்கள் எதிர்பார்ப்பது இதுபோன்ற வெறும் பேச்சுக்களை அல்ல. வேலைகளையே எதிர்பார்த்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.