காஞ்சிபுரம்: காஞ்சி மடம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒரே நாடு ஒரே தேர்தல் நங்கக வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஓரிக்கை அடுத்த உள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் ஸ்ரீகால சாந்தி வைபவ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வானது, காஞ்சி மடத்தின் தற்போதைய பீடாதிபதியாக, காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமி முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பல பீடங்களில் ஆச்சாரியாளர்கள், மடாதிபதிகள், பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி, எச்.ராஜா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மகா பெரியவர் குறித்து பேசிய சுவாமி, தற்போதைய திமுக அரசையும் விமர்சித்தார்.
திராவிடம் என்று கூறி வந்த கருணாநிதி அவர் பெயரிலேயே கருணா என்ற சொல் சமஸ்கிருதத்தில் உள்ளது. நிதி என்று சொல்லும் சமஸ்கிருத வார்த்தை தான். உதயசூரியன் என்ற சொல்லும் சமஸ்கிருதத்தில் தான் உள்ளதுதான் சுட்டிக்காட்டினார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்த செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சாமி, இங்கு உள்ள சில முட்டாள்தனமான அமைச்சர்கள் மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பிப்போம் என கூறி வருகிறார்கள். சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது அது முடிவுக்கு வந்துவிட்டது. ராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளேன். ஏற்கனவே முதல் மனுவில் வெற்றி பெற்றிருக்கிறேன். பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வருகிற 22-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்றார்.
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள பாஜக தலைவர்கள் கூறி வரும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்று கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்தவர், அது நடைபெற வாய்ப்பில்லை, அவ்வாறு நடக்காது என்று கூறினார்.