திருவனந்தபுரம்: கேரளத்தை உலுக்கிய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என கூறப்பட்ட நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். அவர்மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என கூறி நீதிபதி திலிப் மற்றும் அவரது நண்பரை விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளார்.

எட்டு ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு,  இன்று  (டிசம்பர் 8, 2025) எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், திலீப்பை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களிலிருந்து விடுவித்தார். திலீப் எட்டாவது குற்றவாளி. இருப்பினும், நீதிமன்றம், எண்.1 மணி நேரத்திற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டறிந்துள்ளது.

கேரள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், பிரபல மலையாள ‌நடிகர் திலீப்பும், அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் மீது புகார் கூறப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி  நடைபெற்ற இந்த சம்பவமானது,  கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்குச் சென்ற போது,  நடிகை பாவனாவை  ஒரு கும்பல் கடத்தி ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்து அதனை விடியோ பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து கேரள காவல்துறை விசாரணை நடத்தி, நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர்களும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.  இதுதொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில்,  வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் குற்றம் சாட்டிய நடிகையின் கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பல்சர் சுனில் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் கேரள திரையுலகு மட்டுமின்றி தமிழ்நாடு, மும்பை உள்பட பல மாநில திரையுலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊடகங்கள் விவாதங்களை நடத்திய நிலையில், பல நடிகைகள் இந்த விஷயத்தில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இநத் நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலிப் கைது செய்யப்பட்டு  சுமார் 3 மாதம் சிறையில் இருந்தார். மேலும், வழக்கு தொடர்பாக, 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 8 ஆண்டுகள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் பல்வேறு ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

இந்த விவகாரத்தில், ஏ1 முதல் ஏ 6 வரை அதாவது சுனில் மற்றும் மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீ, பிரதீப் .இருந்த பல்சர் சுனில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று மதியம் பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்டிருந்தார். கைதாகி 85 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், திலீப் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்தநிலையில், அவர் மற்றும் அவரது உதவியாளர்  உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

பலாத்கார வழக்கில் எனக்கு எதிராக போலிஸ் சதி : நடிகர் திலீப்

நடிகை பலாத்கார வழக்கு: மலையாள நடிகர் திலிப் மீதான குறுக்கு விசாரணைக்கு உச்சநீதி மன்றம் தடை!