மதுரை,

டைபெற்று முடிந்த அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை மறுத்துள்ளது.

மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான தேசிய அளவிலான நீட் நுழைவு தேர்வு கடந்த 7ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.

மொத்தம் 104 இடங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். நீட் தேர்வு எழுதவந்த மாணவர், மாணவிகளிடையே ஆசிரியர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். இதுகுறித்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில்  நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மாணவர்கள்  9 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நீட் தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து  சிபிஎஸ்இ, இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதாரத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

[youtube-feed feed=1]