சென்னை: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தமான SIR தொடங்கி உள்ள நிலையில், அதற்குகு தடை கோரிய திமுக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரரவிட்டதுடன், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டதுடன் பணிகள் தொடரலாம் கூறி உள்ளது.
தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள SIR பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், SIR-க்கு தடை விதிக்க மறுத்துள்ளது. வழக்கமான நடைமுறையை கண்டு ஏன் அச்சப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பியதுடன், நவம்பர் 26 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்பட ட 12 மாநிலங்களில், SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம்) பணி இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 4ந்தேதி முதல் தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு இண்டியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென், மேற்கு வங்க காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் விசாரித்தது. தமிழகத்தில் SIR நடைமுறையை எதிர்த்து திமுக தனது செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், பணிகளுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
SIR பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி, திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. தமிழ்நாட்டில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்டவைகளை மேற்கோள்காட்டி, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில், SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள்மீதான விசாரணையின்போது, “SIR நடத்தப்படும் காலம் பருவமழைக் காலம் என்றும், அப்போது அதிக மழைப் பொழிவு இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் SIR பணிகளை மேற்கொள்ள முடியாது என்று திமுக சார்பில் வாதிடப்பட்டது.
மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள், வேறு மாநில அதிகாரிகள் பருவமழை வெள்ளம் தொடர்பான பணிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் அறுவடை திருவிழாவான பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்றும், அந்த நேரத்தில் SIR பணிகளை மேற்கொள்வது சிக்கலை ஏற்படுத்தும்” எனவும் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் இதற்கான அனைத்து விளக்கங்களையும் கொடுப்பார்கள் என நீதிமன்றம் பதில் அளித்தது.
அதன்பின், மலைக் கிராமங்கள் போன்ற இடங்களில் இணையதள வசதி கிடைப்பது சிரமம் என்றும், சரியாக ஒரு மாதம் இருப்பதால், வாக்காளர்களுக்கு போதிய கால அவகாசம் இருக்காது எனவும் திமுக சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
ஆனாலும், இது தொடர்பாக அனைத்து மனுக்களின் நகல்களையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. மேலும், 2 வாரங்களில் தேர்தல் ஆணையம் அதற்கு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இதனிடையே SIR பணிகள் தொடர்ந்த நடைபெறலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையின்போது, இதுதொடர்பாக, ECI மற்றும் பிறரிடமிருந்து நாங்கள் பதிலைப் பெறுவோம், இதற்கு, மனுதாரர்களிடம் இந்த நடைமுறை குறித்து அவர்கள் ஏன் இவ்வளவு அச்சப்படுகிறார்கள் என்று பெஞ்ச் கேட்டது.
அப்போருது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும் போது இருந்ததைப் போலல்லாமல், SIR நடைமுறை அவசரமாக மேற்கொள்ளப்படுவதாக வாதிட்டார். மேலும் SIR நடைமுறையின் செல்லுபடியை எதிர்த்து, சிபல் பல்வேறு மாநிலங்களில் நிலைமை வேறுபட்டது என்று கூறினார். இந்த பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் அதிக மழை பெய்யும், மற்ற மாநிலங்களில் இது போன்ற மழை பெய்ய வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.
பின்னர் இந்த விஷயத்தை விசாரிப்போம்” என்று நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது, மேலும் இந்த வழக்கை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.