டில்லி:
காஷ்மீர் நிலவரத்தையும், மக்களையும், அரசியல் தலைவர்களையும் சந்திக்க ராகுல்காந்தி தலைமையில் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் டில்லிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதுடன், அம்மாநி லத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவுகளை நீக்கியது. இதைத் தொடர்ந்து, அங்கு 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இணையதள இணைப்பு, செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அம்மாநில அரசியல் தலைவர்கள், கட்சி பிரமுகர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், அம்மாநில மக்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க சென்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட குலாம்நபி ஆசாத், திருச்சி சிவா, கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா, சரத்யாதவ், மனோஜ் ஜா, மஜீத் மேனன் உள்பட எதிர்க்கட்சித் தலைவரும் விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றனர்.
அவர்கள், காஷ்மீர் மக்களைச் சந்தித்து நிலவரங்களைக் கேட்டறிய உள்ளதாக அவர்கள் தெரிவித் திருந்தனர். அவர்கள் சென்ற விமானம் பிற்பகலில் ஸ்ரீநகரில் தரை இறங்கியது. விமான நிலையத் தில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், ராகுல்காந்தி உள்பட எதிர்க் கட்சித் தலைவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.
அவர்களை விமான நிலையத்திலேயே மடக்கிய அதிகாரிகள், மீண்டும் விமானத்தில் டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியினர் சென்ற குழுவினருடன் சில ஊடகத்தினரும் சென்றிருந்த நிலையில், விமான நிலையத்தில், ஊடகத்தினருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.