தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி கடனா அணை பகுதியில் 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
தவிர, வங்க கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் மழை தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.
இதனால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் தனது தீவிரத்தை காட்ட உள்ளதை அடுத்து பல மாவட்டங்களில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.