சியோல்: அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில், வடகொரியா அரசு ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி மிரட்டல் விடுத்துள்ளது. இது தென்கொரியா உள்பட உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் நடவடிக்கை மர்மமாகவே உள்ளது. அதுபோல அந்நாட்டின் நடவடிக்கையும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. திடீரென தென்கொரியா மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுப்பதும், அமெரிக்காவையே வந்து பார் என சவால் விடுவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அதற்கேற்றார் போல அவ்வப்போது ஏவுகணைகளை சோதனை செய்து அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறது. மேலும், தங்களிடம் அணுஆயுத ஏவுகணை தயாராக இருப்பதாகவும், அதை ஏவ  தயங்க மாட்டோம் என்றும்மிரட்டல் விடுத்து வருகிறார் அதிபர் கிம்.

இந்த சூழலில், அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அதிருப்தி அடைந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ‘, தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அத்துடன், மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டல் விடுத்தது. ஆனால், அதற்கு அமெரிக்கா பணியாத /நிலையில், இன்று  அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இன்று . காலை 17 ஏவுகணைகள் நண்பகல் 6 ஏவுகணைகள் என மொத்தம் 23 ஏவுகணைகளை ஏவி வடகொரியா மிரட்டியுள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை பதற்றம் நிறைந்த கிழக்கு கடற்பகுதியில் வீசி வடகொரியா சோதனை நடத்தியுள்ளதாக தெரிகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய அதேபகுதியில் தென்கொரியாவும் ஏவுகணைகளை ஏவி பதிலடி கொடுத்துள்ளது.

இரு நாடுகளும் அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. வடகொரி அதிபரின் செயல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.