தென் கொரியாவை தனி நாடாகவும் விரோத நாடாகவும் வட கொரியா அறிவித்துள்ளது.
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அதிகரித்துவரும் மோதலின் அடுத்தகட்டமாக வடகொரியாவின் இந்த அதிரடி நடவடிக்கை கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இரு கொரியாவையும் இணைக்கும் முயற்சியை கைவிட அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வந்துள்ள வடகொரியா, தென் கொரியா உடனான சாலை மற்றும் ரயில் இணைப்புப் பாதைகளை தனது ராணுவத்தின் மூலம் வெடிவைத்து தகர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தென் கொரியா, இரு கொரியாவையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே அதிகரித்து வரும் இந்த மோதல் போக்கு இருநாட்டு உறவு மட்டுமன்றி அந்த பிராந்தியத்தின் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.