தென் கொரிய முன்னாள் அதிபர் கியூன்ஹை,

சியோல்:

தென் கொரிய முன்னாள் அதிபருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாக வடகொரியா அறிவித்துள்ளது.

தென் கொரிய முன்னாள் அதிபர் கியூன்ஹை, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை விமானத்தில் குண்டு வைத்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டியது.

இதுகுறித்து வடகொரியா விசாரணை மேற்கொண்டு வந்தது. அதில் குண்டு வைக்க முயன்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக வடகொரியா கூறி உள்ளது.

இதைத்தொடர்ந்து தென்கொரி முன்னாள் அதிபர்  கியூன் ஹைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வடகொரிய அதிபரின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

வடகொரி அதிபரின் ஆதரவு பத்திரிகையான கேசிஎன்ஏ  இந்த செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் இந்தத அறிவிப்புக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.