பெங்களூரு
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலவராக தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு வட இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் தாக்கி பதிவிட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் முன்பு குஜராத் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது இவரை கொல்கத்தா அணி ரூ.7.4 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் இந்த அணிக்கு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை அணியின் தலைவராகவும் மூத்த கிரிக்கெட் வீரர் உத்தப்பாவை துணை தலைவராகவும் அணி தேர்ந்தெடுத்தது.
இதற்கு வட நாட்டு ரசிகர்கள் கடும் எதிர்ப்பை டிவிட்டரில் காட்டி உள்ளனர். அவர்கள் தமது டிவீட் மூலம் தினேஷ் கார்த்திக் மற்றும் அவர் தலைமையை தாக்கி உள்ளனர்.
பராக் என்பவர், “எனக்கு காலையில் விபத்து ஏற்பட்ட விபத்து வலியை மீறி கொல்கத்தா அணியின் கேப்டனை நினைத்து சிரிப்பு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
கவுஸ்தப் குமார் என்பவர், “கொல்கத்தா அணி கண்டிப்பாக கடைசியில் வரும் என்பதால் நான் இனி ஐபிஎல் பார்க்க மாட்டேன்” என பதிந்துள்ளார்.
சல்மான்கான் என்பவர், “கொல்கத்தா அணிதான் முதலில் வெளியேற போகிறது. தினேஷ் கார்த்திக் தலைமை பொறுப்புக்கு தகுதியற்றவர். அணியின் மிக மிக மோசமான முடிவு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது போல பல வட இந்திய ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்குக்கு எதிராக பதிந்துள்ளனர்.