பானாஜி:

கோவா மாநில நகரமைப்பு துறை அமைச்சர் விஜய் சர்தேசி பானாஜி அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களை விட ஒரு மாநிலம் தலை சிறந்து நிற்பது என்பது கடினமாக உள்ளது. இதர மாநிலங்களில் இருந்து வரும் பொறுப்பற்ற சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்துவது பெரிய வேலையாக உள்ளது. கோவா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த முதல்வர் முயற்சி செய்து வருகிறார்.

மாநில மக்கள் தொகையை விட 6 மடங்கு அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் உச்சபட்ச பயணிகள் கிடையாது. இவர்கள் அனைவரும் இந்த பூமியின் குப்பைகள். அவர்களுக்கு பொறுப்பு, உணர்வு உள்ளதா? என்றால் இல்லை’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘இந்தியாவின் இதர மாநில மக்களை விட கோவா மக்கள் அதிக வருவாய் ஈட்டுகின்றனர். சமூக மற்றும் அரசியல் உணர்வு, சுகாதார நலன் உள்ளிட்ட பல நலன்களை கவனத்தில் கொள்கின்றனர். அதனால் தான் சுற்றுலா வரும் பயணிகளை விட கோவா மக்கள் உயர்ந்து காணப்படுகின்றனர். அவர்களை எப்படி கட்டுப்படுத்துவது’’ என்றார்.

வட இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கோவாவை ஹரியானாவாக மாற்ற முயற்சி செய்கின்றனர். அவர்கள் இந்த பூமியின் குப்பை. நாங்கள் வட இந்தியர்களை நம்பி தான் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கு கோவா குறித்த கவலை இல்லை’’ என்றார்.