பிஸ்மார்க்
அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான வடக்கு டகோட்டா சட்டப்பேரவை தேர்தலில் கொரோனாவால் உயிரிழந்தவர் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான வடக்கு டகோட்டாவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.
இதற்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.
இதில் ரிபப்ளிக் கட்சி சார்பில் போட்டியிட்ட 55 வயதான டேவிட் அந்தாகி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி அன்று டேவிட் அந்தாகி கொரோனா பாதிப்பால் உயிர் இழந்துள்ளார்.
தற்போது இந்த மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுவரை சுமார் 1 லட்சம் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel