நாக்பூர்

ட மாநில பயணிகள் காசி  தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில்  கண்ணாடியை உடைத்து உள்ளே ஏற முயன்றுள்ளனர்.

காசி மற்றும் தமிழகம் இடையிலான வரலாற்று தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இதன் 3-ம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடங்கி வரும் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையிட்டு சென்னையில் இருந்து பனாரசுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.

ரயிலில் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் உள்பட சுமார் 700 பேர் இருந்த இந்த ரயில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே வந்த போது, முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருந்த வடமாநில பயணிகள் சிலர் யிலில் ஏற முயன்றனர். இது சிறப்பு ரயில் என்பதால் பெட்டிகளின் கதவுகளை தமிழக பயணிகள் பூட்டி வைத்திருந்தனர்.

ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவில் உள்ள கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர். இதனால் வெளியில் இருந்த பயணிகளுக்கும், உள்ளே இருந்த தமிழக பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழல் ஏற்பட்டது.