புதுடெல்லி:
குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது.
தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது.
இதுகுறித்து வெளியான செய்தியில், அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும், அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் , இன்று துவங்கும் வேட்பு மனு தாக்கல் வரும் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும் என்றும், ஜூலை 22-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.