சண்டிகர்: பஞ்சாப் மாநில ஆத்ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் உள்பட 5 பேர் அறிவிக்கப்ட்டு உள்ளனர். இதுகுறித்து கூறிய ஹர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் விளையாட்டு வசதிகளை வழங்குவதே தனது நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் 117 தொகுதிகளில் 92 இடங்களை ஆம் ஆத்மிக் கட்சி கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து முதல்வர் பகவந் மானின் நண்பரான கிரிக்கெட் வீர் ஹர்பஜன்சிங்குக்கு பதவி வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. பின்னர், ஹர்பஜனை மாநிலங்களவை எம்.பி.யாக நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், பஞ்சாபில் காலியாகும் 5 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. மார்ச் 31ஆம் நாள் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆத்ஆத்மி கட்சி பெருவாரியான வெற்றி பெற்று இருப்பதால் 5 எம்.பி.க்கள் இடமும் ஆத்ஆத்மி கட்சிக்கே கிடைக்கும் வாய்ப்பு எழுந்துள்ளத.
இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உட்பட 5 பேரை வேட்பாளர்களாக ஆம் ஆத்மிக் கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி சட்டமன்ற உறுப்பினர் ராகவ் சதா, டெல்லி ஐஐடி பேராசிரியர் சந்தீப் பதக், லவ்லி பல்கலைக்கழகத்தின் வேந்தர் அசோக் மிட்டல், மார்பகப் புற்றுநோய் சிகிச்சை மைய அறக்கட்டளை நிறுவனரான சஞ்சீவ் அரோரா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தான் மாநிலங்களை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துள்ள ஹர்பஜன்சிங், மாநிலத்தில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த மாநிலமாக மாற்ற முயற்சி செய்வேன், அதுவே தனது நோக்கம் என்று கூறியுள்ளார்.