டெல்லி: பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்ட நிலையில், அதை வாங்க பொதுமக்கள் முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது. இது மத்திய பாஜக அரசுக்கு கிடைத்த அவமானமாகவே கருதப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு தரப்பினர், அமைப்பினர் கொடுக்கும் பரிசுபொருட்கள், மின்னனு முறையில் ஏலம் விடப்பட்டு வருகிறது. அதன்மூலம் கிடைக்கும் பணம், அரசின் திட்டங்களுகு செலவிடப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட 1,300 க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை இணையதளம் வாயிலாக ஏலம்விடப்படும் என அறிவிக்கப்பட்டது .இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் நிதி கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் ‘நவாமி கங்கா’ திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மின்னணு ஏலம் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கப்பட்டது. விருப்பமுள்ளோர் அக்டோபர் 7-ம் தேதி வரை  ஏலத்தில் பங்கேற்கலாம் என மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்திருந்தது. ஆனால், ஏலத்தில் பொருட்கள் எடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி ரூ.1 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, அது ரூ.1 கோடியே 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது. மற்ற போருட்கள் மீது அதிக அளவில் ஏலதாரர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும்,  ரூ.5000 முதல் ரூ.90 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட பல பொருட்கள். ஒவியங்கள், புகைப்படங்கள், பிரதமர் மோடி தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் போன்றவற்றை வாங்க யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், கலாச்சாரத்துறை அமைச்சகம்மோ, 162 பொருட்களுக்கு மட்டும்தான் யாரும் ஏலம் கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

மக்கள் மத்தியில் மோடி மீதான நன்மதிப்பும் குறைந்து வரும் நிலையில், அவரது பரிசு பொருட்களை மக்கள் புறக்கணித்துள்ளது, இதன்மூலம் தெரிய வந்துள்ளது.