கேம்பிரிட்ஜ்

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் புற்று நொயால் மரணம் அடைந்தார்.

புகழ் பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக். தன்னுடைய கவித்துவமான, தனித்துவமான படைப்புகள் காரணமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் ஆவார்.  இவர் புலிட்சர் விருது, அமெரிக்காவின் புத்தக விருது, புத்தக விமர்சனங்கள் விருது உள்ளிட்டவற்றை வென்றவர். அமெரிக்க நாட்டின் அரசவை கவிஞராகவும் இருந்தவர் ஆவார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இவரின் இலக்கிய சேவையைப் பாராட்டி இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகில் உள்ள பெரும்பாலான இலக்கிய விருதுகளுக்கு சொந்தக்காரரான லூயிஸ் க்ளுக் மாசாசூட்ஸ் மாகாணம் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்

சுமார் 80 வயதாகும் லூயிஸ் க்ளூக்குக்கு சிலமாதங்களுக்கு முன்பு புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் புற்றுநோய் காரணமாக  மரணமடைந்தார்.

லூயிஸ் க்ளூக் படைப்புகள் பெரும்பாலும் தத்துவங்கள், கசப்பான நினைவுகள், மரபுசார் குறிப்புகள், சமகால நிகழ்வுகள், டார்க்-நகைச்சுவை ஆகியவற்றைக் கொண்டவை ஆகும்.  லூயிஸ் க்ளுக்கின் மரணம் இலக்கியவாதிகளிடையே பேசுபொருளாகி உள்ளது.