ஸ்டாக்ஹோம்:  பொருளாதாரத்துக்கும் நோபல் பரிசு. வங்கிகள், நிதி நெருக்கடி குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.  பெர்னான்கே உள்ளிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்களுக்கு நிதி நெருக்கடிகள் குறித்த பணிக்காக நோபல் பொருளாதாரப் பரிசு வழங்கப்பட்டது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசுநு, பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி மற்றும்,  2 அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று  பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெச்.டிப்விக் ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப் படுகிறது.