இந்தூர்:

ரடங்கு  உத்தரவால் போக்குவரத்து முழுவதும் முடங்கிய நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், உயிரிழந்த இந்து பெண் ஒருவரின் உடலை, பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்களே தூக்கி சென்று அடக்கம் செய்து உள்ளனர்.

இறந்த பெண்ணின் உடலை தூக்கி செல்ல ஒரு இளைஞர் ஒருவரும் உதவி செய்துள்ளார். கொரோனா வைரஸ் பரவிட வாய்ப்புள்ளதால், அந்த பெண்ணின் உறவினர்கள் யாரும் இந்த இறுதி சடங்கில் பங்கேற்கவில்லை.

முகத்தில் மாஸ்க் அணிந்தபடியே, இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்து விட்டு, இறந்த பெண்ணின் உடலை தோளில் சுமந்து கொண்டு 2.5 கிலோ மீட்டர்  தூரம் இளைஞர்கள் சென்றுள்ளார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சுல்ஜா தெரிவித்தார்.
65 வயதான அந்த பெண்மணி, நீண்ட காலமாக நோயால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று, ஊரடங்கு உத்தரவு முன்பு வீடு திரும்பினார் என்று அவரது இரண்டு மகன்கள் தெரிவித்து உள்ளனர்.

இறந்த பெண்ணை அடக்கம் செய்ய உதவிய முஸ்லீம் இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்த  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் முதளமைச்சருமான கமல் நாத், இந்த இளைஞர்களின் செயல் சமூக மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்து பெண்ணின் உடலை அவரது இரண்டு மகன்களுடன்  சேர்ந்து முஸ்லீம் இளைஞர்கள் தூக்கி சென்று உதவி செய்து உள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களின் இந்த செயல் சமூகத்திற்கு ஓரு உதாரணமாக இருந்து வருகிறது. இது கங்கா – ஜமுனி கலாச்சார த்தை பிரதிபலிப்பதாக இருப்பதுடன், சகோதரதுவத்தை பறைசாற்றும் வகையிலும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து முஸ்லீம் இளைஞர்ஒருவர் தெரிவிக்கையில், இது எங்கள் கடமை என்று, சின்ன வயதில் இருத்து அந்த பெண்னை தங்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக  கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.