சென்னை: மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த  தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் க் கூறி அனுமதி வழங்கி உள்ளது. இதனால்   ஃபார்முலா 4 கார் பந்தயம் நாளை திட்டமிட்டபடி தொடங்குகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,  சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்தை ஒருங்கிணைத்து தனியார் நிறுவனமான  Racing Promotions Private Limited உடன் இணைந்து ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை நடத்துகிறது. இப்போட்டி  நாளை (ஆகஸ்ட் 31ம்)  மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில்  சென்னையின் மைய பகுதியில் நடைபெற  உள்ளது.

இதற்கனா ஓடுதளம்   சென்னையில் தீவுத்திடலையொட்டியகொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைந்துள்ள  அரசினர் தோட்டம், மக்கள் நடமாட்டம் உள்ள எ அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை,  கடற்கரையில் உள்ள நேப்பியர் பாலம் மற்றும் போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பந்தயத்தை 8000 பேர் வரை நேரில் அமர்ந்து பார்க்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தால் சென்னை மக்களின் அன்றாட வாழ்வியல் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. இதுதொடர்பான பல வழக்குகள் நடத்தப்பட்ட நிலையில், அனைத்தையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து அரசுக்கு ஆதரவாகவே தீர்ப்புகளை வழங்கி உள்ளது.

இந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக் கோரி பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பொதுமக்கள் பாதுகாப்பு, இயல்பான போக்குவரத்து ஏற்பாடு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இல்லாமல் செல்வது உள்ளிட்டவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,   ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை எனக் கூறி அனுமதி வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.