புனே: இந்தியாவில் தற்போது ‘கருப்பா அல்லது வெள்ளையா’ என்ற இரண்டு விஷயங்கள்தான் விருப்பத் தேர்வுகளாக உள்ளன என்றும், அவற்றுக்கு இடையில் சகிப்புத்தன்மை என்பதே கிடையாது என்றும் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான சசி தரூர்.
ஆளுங்கட்சியின் விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் தற்போது முனைவாக்க(polarization) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது, “எனக்கான ஒரு இந்து வழிமறை இருக்கிறது. அவனுக்கு இருக்கிறது, அவளுக்கும் இருக்கிறது மற்றும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இந்து வழிமுறை இருக்கிறது. ஏனெனில், இந்து மதம் கடுமையான வழிமுறைகளை எப்போதும் கொண்டிருப்பதில்லை என்பதுதான் இதற்கான காரணங்கள்.
நான் ராமனை வழிபடலாம், அனுமன் மந்திரங்களை உச்சரிக்கலாம். அந்தவகையில் நான் இந்துவாக கருதப்படலாம். ஆனால், இவை இரண்டையும் நான் செய்யவில்லை என்றாலும் நான் இந்துதான். ஆனால், இந்த நிலையை பாரதீய ஜனதா மற்றும் சங்கபாரிவாரங்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.
உங்களிடம் உண்மை இருக்கிறதென்று நீங்கள் நம்பலாம், என்னிடம் உண்மை இருக்கிறதென்று நான் நம்பலாம். உங்கள் உண்மையை நான் மதிக்கிறேன், தயவுசெய்து எனது உண்மையை நீங்கள் மதியுங்கள்” என்றுள்ளார் அவர்.