அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா விதிகளை அர்ஜென்டினா தளர்த்தியுள்ளது.

செல்லுபடியாகும் அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்திய குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்தியுள்ளதாக இந்தியாவிற்கான அர்ஜென்டினாவின் தூதர் மரியானோ கௌசினோ நேற்று தெரிவித்தார்.

அமெரிக்க சுற்றுலா விசா வைத்திருக்கும் இந்தியர்கள் இப்போது அர்ஜென்டினா விசாவிற்கு தனித்தனியாக விண்ணப்பிக்காமல் அர்ஜென்டினாவிற்குள் நுழையலாம் என்று அந்நாட்டு அரசுக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவும் அர்ஜென்டினாவும் பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்து வரும் நேரத்தில் இந்த விசா அர்ஜென்டினா சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.