அரியலூர்:

அரியலூரில் 144 தடை கிடையாது என்றும் தனிநபருக்கான 144(3) செக்ஷனில்தான் தடை விதிக்கப்பட்டு உள்ளது வருவாய் கோட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

றைந்த வன்னியர் சங்க தலைவரும், பாமக நிர்வாகியுமான காருவெட்டி குரு வின் பிறந்தநாளான பிப்ரவரி 1ந்தேதி நாளை, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நடைபெற உள்ளது.

இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில், ஏற்கனவே பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வன்னியர் சங்கத்தை சேர்ந்த வழுவூர் மணி எனப்படும் விஜிகே மணி தரப்பினர் கலந்துகொள்ள இருப்பதாகவும், அப்போது பாமகவுக்கு எதிராக புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து பாமக மற்றும் காடுவெட்டி குரு குடும்பத்தினரின் புகாரின் பேரில் காடுவெட்டி குருவின் ஊரில்  144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், காடுவெட்டியில் 144 தடை உத்தரவு என்பது வீண் வதந்தி என்று உடையாளர்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

காருவெட்டி கிராமத்தில் நாளை நடைபெற உள்ள பிறந்த நாள் விழாவில், நாகை மாவட்டம் வழுவூர்  கிராமத்தை சேர்ந்த ஜிகேமணி எனப்படும்  மணி கண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை தெரிவித்ததால், விஜிகே மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜனவரி 31ம் தேதி (இன்று)  காலை 10 மணி முதல் வரும் பிப்ரவரி 10ம் தேதி வரை அந்த பகுதிக்குள்  நுழைய 144(3)  தடைதான்  விதிக்கப்பட்டு உள்ளது என்று உடையார்பாளையம் ஆர்டிஓ தெளிவுபடுத்தி உள்ளார்.

இந்த செக்சன் 144(3) என்பது  தனிநபர் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கான தடை என்று கூறப்படுகிறது.