டில்லி:
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய கணக்கு தணிக்கை அமைப்பு (சிஏஜி) அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ‘‘ பாதுகாப்பு துறையில் ஆயுத தளவாடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. 40 நாட்கள் போர் நடந்தால், அதில் 20 நாட்களுக்கு சமாளிக்கும் அளவிற்கே போர்க் கருவிகள் உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘ பாதுகாப்பு துறையில் ஆயுத பற்றாக்குறை என்பது இல்லவே இல்லை. இது பற்றி விவாதம் நடத்தி, பிரச்னை ஆக்குவதும் தேவையற்றது.
நான் ராணுவ அமைச்சராக பொறுப்பேற்ற உடன் இது பற்றி மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடம் பேசினேன். ஆயுதங்கள் வாங்குவது என்பது தொடர்ச்சியாக நடக்கும் ஒரு நடைமுறை. இதில் பற்றாக்குறை எப்படி வர முடியும்?’’ என்றார்.