புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளது, ராஜினாமா செய்ய மாட்டோம் என என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சாசனப்படி புதுச்சேரி அரசு செயல்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 14 பேர் ஆதரவு இருந்து வந்தது. இவர்களில் 4 பேர் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்தது. இதனால், முதல்வர் தலைமையில், காங்கிரஸ் அரசு ராஜினாமால செய்யும் என மாநில அமைச்சர் கந்தசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, இந்திய அரசியல் அமைப்பு சாசனப்படி புதுச்சேரி அரசு செயல்படும் , தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், அமைச்சரவை ராஜினாமா செய்யப்போவது இல்லை என்று கூறியதுடன், தேவைப்பட்டால், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் எனவும் தெரிவித்தார்.