சென்னை:

யணிகள் வசதிக்காக ரெயிலில் பயணம் செய்பவர்கள் குறித்து, அந்தந்த பெட்டியில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் பற்றிய விவரம் குறித்த சார்ட் ஒட்டப்படுவது வழக்கம்.

ஆனால், இனிமேல் ரெயில் பெட்டிகளில் பயணிகள் சார்ட் ஒட்டுவதில்லை என்று ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே கர்நாடகம் உள்பட ஒருசில மாநிலங்களில் உள்ள ரெயில் பெட்டிகளில் ரிசர்வேஷன் சார்ட் ஒட்டப்படுவதில்லை என்ற முடிவு நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், தற்போது தமிழகத்திலும் சார்ட் ஒட்டுவதை தவிர்க்க முடிவு எடுத்துள்ளது.

இதன் முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல், புதுதில்லி நிஜாமுதீன், மும்பை சென்ட்ரல், மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், ஹௌரா, சியால்டா ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே ரிசர்வேஷன் சார்ட்டை முன்பதிவுப் பெட்டிகளில் ஒட்டும் வழக்கத்தை நிறுத்துவதற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரெயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவு காரணமாக காகிதப் பயன்பாடும் கட்டுப்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதாகவும், மேலும் இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.30 லட்சம் செலவு மிச்சமாகும் என்றும் கூறி உள்ளது.

ரெயில்வே நிர்வாகத்தில் இந்த முடிவு காரணமாக, முன்பதிவு செய்து வெயிட்டிங் லிஸ்ட், ஆர்.ஏ.சி பயணிகள் தங்களது பயணம் குறித்த இறுதி நிலவரம் குறித்து அறிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.