சென்னை: முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ரயில்வே பதில் தெரிவித்துள்ளது.

ரயில்களில் Unreserved பெட்டிகள் குறைத்துள்ளதாக மத்தியஅரசை சாடிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”Sadist அரசு” என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என ரெயில்வே துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரயில் சேவைகளுக்கு மக்களிடையே தனி வரவேற்பு உள்ள நிலையில், எப்போதும் ரயில்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில்,  நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைத்துள்ளதாகவும், மேலும் AC 3 Tier பெட்டிகளை இணைக்க ஒன்றிய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.  , சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரெயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள்  குறைக்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  தகவல்கள் வெளியாகின. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை சுட்டிக்காட்டி,  முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.  இந்திய ரயில்வே  இந்த அறிவிப்பு யாருக்கானது  என்பது இதிலிருந்தே  தெளிவாக தெரிகிறது. சமூக வலைத்தளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம். அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு” என கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இந்தியன் ரயில்வே விளக்கம் அளித்தள்ளது. அதில்,  ரயில்களில்  முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என ரெயில்வே துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இந்தப் பெட்டிகளை அதிகரிக்க  திட்டமிட்டிருந்ததாகவும்,   மஹா கும்பமேளா சிறப்பு ரயில்களுக்காக முன்பதிவு செய்யப்படாத திறனை அதிகரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் பிரயாக்ராஜுக்கு திருப்பி விடப்பட்டன. பிப்ரவரி 26 ஆம் தேதி மேளா முடிந்ததும் இவை மீண்டும் ஒதுக்கப்படும்.

மேலும்,   பல வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மார்ச் முதல் மூன்றிலிருந்து நான்காக அதிகரிக்கப்படும். சென்னை-திருவனந்தபுரம், சென்னை-ஆலப்புழா மற்றும் சென்னை-மைசூர் வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இரண்டிலிருந்து நான்காக அதிகரிக்கப்படும். மொத்தம் 14 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு கூடுதல் பெட்டிகள் வழங்கப்படும்.

இவ்வாறு ரெயில்வே அறிவித்து உள்ளது.