லக்னோ:
தன்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக, சின்மயானந்தாவால் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கூறிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரான சின்மயானந்தா மீது பாலியல் வன்புணர்வு தொடர்பான சட்டப்பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் சாதாரண பிரிவின் கீழ் புகாரை பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
பாலியல் வன்புணர்வு தொடர்பான குற்றச்சாட்டுக்கு உரிய பிரிவில் வழக்கு பதியாமல், அதற்கு பதிலாக ஐபிசி 376 சி ( 376C – Sexual intercourse by person in authority) பிரிவின் படி, அதிகார முள்ள நபருடன் பாலியல் உடலுறவு வைத்துக்கொண்டதாக புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரிவின்படி, ஒருவர் மீது புகார் பதிய வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நபர், குற்றம் சாட்டப் பட்ட நபரின் மனைவியாக இருக்க வேண்டும். அல்லது பணத்துக்காக விலைபோகும் விலைமாதாக இருக்க வேண்டும்.
ஆனால், தனது கல்லூரியில் படித்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த சின்மயானந்தா மீது, 376 சி பிரிவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சின்மயானந்தா மீது பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரைத் தொடர்ந்து உச்சநீதி மன்றம் தலையிட்டு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தியது. விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் 43 வீடியோக்களையும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்தே இன்று காலை சின்மயானந்தா கைது செய்யப்பட்டார். ஆனால் அவர்மீதான சாதாரண குற்றச்சாட்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக சின்மயானந்தாவுக்கு ஆதரவாக பாஜக மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிடுவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.