புதுடெல்லி: சியாச்சின் உள்ளிட்ட அபாயம் மிகுந்த பகுதிகளில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு, அத்தியாவசியமான மற்றும் தகுதியான உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

சிறப்பு ஆடைகள், உணவுப் பொருட்கள், தகுதியான மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்கள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆபத்தான பகுதிகளில் நாட்டிற்காகப் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவது குறித்து பரிந்துரைக்கப்பட்டும், தேவையற்ற தாமதம் நிலவுகிறது. திட்டச்செலவு ரூ.395 கோடி என்பதிலிருந்து ரூ.4007.22 கோடி என்பதாக மதிப்பிடப்பட்டது.

உயரமானப் பகுதிகளுக்கான உடைகள் மற்றும் உபகரணங்கள், பனியில் அணியும் கண்ணாடி, பல்வகைப் பயன்பாடு கொண்ட ஷூக்கள் உள்ளிட்டவை அவற்றுள் அடக்கம்.

தற்போதைய நிலையில், பழைய மாதிரியிலான உபகரணங்களேப் பயன்படுத்தப்டுவதால், வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் மற்றும் அவர்களுக்கான சூழலும் சவாலானதாக மாறுகிறது.

எப்போதும் தேசியவாதம் மற்றும் பயங்கரவாத கோஷத்தில் குளிர்காயும் பாரதீய ஜனதா, ராணுவ வீரர்கள் விஷயத்தில் இவ்வளவு மோசமாக நடந்துகொள்வது ஏன்? என்ற கேள்வியை எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.