டெக்சாஸ்: அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதால், அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனார் ஹீட்டர் இயக்க முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர். இந்த கடுமையான பனிப்பொழிவு  112 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

வட அமெரிக்காவில் உள்ள லேக் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏரி முழுவதும் பனி படர்ந்துள்ளது. முக்கிய சாலைகளில் பனி உறைந்துள்ளதால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இயந்திரங்களை கொண்டு பனிக்கட்டிகளை அகற்றி போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர். விர்ஜினியா ஜெயின், லூயிஸ், மிசோரி, ஒடிசா, டெக்சா போன்ற பகுதிகளில் வரலாறு காணத அளவு பனிப்பொழிவு  காணப்படுகிறது.

டெக்சாஸ் மாநிலத்தில் வெப்பநிலை-12° Fahrenheit அல்லது-23° செல்சியஸ் அளவுக்கு உள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், குளிரில் வாடும் லட்சக்கணக்கான மக்கள் வெப்ப நிலையை உருவாக்கும் ஹீட்டரைக்கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

மாநிலம் முழுவதும மின்சாரம் இல்லை, இணையம் இல்லை, ஹீட்டர் இல்லை, தண்ணீர் இல்லை என புலம்பும் மக்கள், மாகாண அரசு, மெக்சிகோ அரசிடம் இருந்து கூடுதல் மின்தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கிறார்கள்  வியாழக்கிழமைக்குள் அமெரிக்காவுக்கு மெக்சிகோவில் இருந்து கூடுதலாக மின்சாரத்தை கொண்டு வர  முயற்கிக்ள் மேற்கொள்ளப்பட்டு வருவதாககூறப்படுகிறது.

டெக்சாஸ் மாநிலத்தில் நிலவி வரம் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவு காரணமாக சுமார்  2 மில்லியன் டெக்சாஸ் குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து, டெக்சாஸ் நகரங்களில் அவசர கால முகாம்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஹூஸ்டன் மேயர்  தெரிவித்து உள்ளார்.

இதன்மூலம்  ஃபோர்ட் வொர்த் குடியிருப்பாளர்கள் சுமார் 1லட்சம் பேருக்கு சூடான நீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் இதுபோல வசதிகளை செய்துதர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மின்விநியோகம் செய்யும்,  சில எரிசக்தி ஆதாரங்களும், எரிவாயு, நிலக்கரி அல்லது அணுசக்தியால் இயக்கப்படும் சீரற்ற காலநிலையால் நாக் அவுட் செய்யப்பட்டன, அவற்றில் பெரும்பாலானவை  வசதிகள். அதுபோல, காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால், காற்றாலைகளும் பனிக்கட்டியால் மூடப்பட்டு உள்ளன. “பல மின் உற்பத்தி நிறுவனங்களின் வசதிகள் ஒரே இரவில் உறைந்து மூடப்பட்டுள்ளன.

டெக்சாஸ் மாநிலத்தில் விசிய பனிப்புயலாது  மாநிலத்தின் பெரும்பகுதியை மூடியுள்ளது. பல சாலைகள் பனிக்கட்டி வைக்கப்பட்டுள்ளன, பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, அரசாங்கத்தின் கிரெக் அபோட்டின் வேண்டுகோளின்படி, ஜனாதிபதி ஜோ பிடென் மாநிலம் முழுவதும் கூட்டாட்சி அவசரகால அறிவிப்பை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வரலாறு காணாத இந்தபனிப்பொழிவு மற்றும் புயல் காரணமாக, மின்சாரமின்றி டெக்சாஸ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.