புதுச்சேரி:
மத நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது என புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அம்மாநில முதல்வர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்ட அனுமதியை பரிசீலிக்க வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் எழுந்தியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி கிரண்பேடிக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், “பிரெஞ்ச் கலாச்சாரத்துடன் இணைந்துள்ள புதுச்சேரியில் விதிகளுக்குட்பட்டே புத்தாண்டை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத நம்பிக்கை விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது.
மத விழாக்களில் மக்கள் கலந்து கொள்ளக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. மக்களுக்காகத்தான் ஆட்சி செய்கிறோம் என்ற எண்ணம் வர வேண்டும். ஆளுநர் தனது நடவடிக்கையை மாற்ற வேண்டும்” என்றார்.
முன்னதாக, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.