டில்லி

கேரள அரசின் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைப்பு கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தேனி மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு ஜீவாதாரமாக உள்ளது.   முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றுக்குத் தமிழக அரசு பல லட்சம் ரூபாய்களைச் செலவழித்து வருகிறது.

கேரளாவில் கனமழை பெய்து வெள்ளம் வரும் போது எல்லாம் முல்லைப் பெரியாறு அணை நீர் தான் காரணம் என பொய்த் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.  இதனால் கேரள மக்கள் இந்த அணை மீது மிகவும் வெறுப்புடன் உள்ளது.  தற்போது கேரளாவில் 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 138 அடியாக குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.  இந்த அணையை மொத்தமாகக் கைவிட வேண்டும் எனக் கேரள நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்டோர் குரல் எழுப்பி வருகின்றனர்.   கேரளாவைச் சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 138 அடியாகக் குறைக்க உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்குக்கு கேரள் ஆர்சு ஆதரவு அளித்துள்ளது.

கேரள அரசு சார்பில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 126 ஆண்டுகள் ஆனதால் அது பலவீனமாக உள்ளதால் அதை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.   மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் அணை வலுவாக உள்ளதாக நிபுணர் குழு அறிவித்ததாகவும் நீர் மட்டத்தைக் குறைக்கவோ வேறு அணை கட்டவோ கூடாது என தெரிவிக்கப்பட்டது

இதையொட்டி உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை நீர் மடடத்தை குறைக்க தேவை இல்லை எனக் கூறி உள்ளது.  மேலும் நவம்பர் 10 ஆம் தேதி வரி அணை நீரின் அளவை 139.5 அடி வரை தேக்கி வைக்கவும் அனுமதி அளித்துள்ளது.   கேரள அரசின் எதிர்ப்பு குறித்த பிரமாணப் பத்திரத்தை வரும் நவம்பர் 8 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என கூறிய உச்சநீதிமன்றம் விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.