மும்பை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எஸ்பிஐ அறிவித்து இருக்கிறது.
தற்போது எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கிராமம், சிறுநகரம், பெருநகரம் என்ற அடிப்படையில் 1,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதனை மீறினால், 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.
எஸ்பிஐ வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். 44.51 கோடி வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பின் மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
இதற்குமுன் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லை என்று கூறி, அடிக்கடி பணம் எடுக்கப்பட்டு வந்ததால் வாடிக்கையாளர்கள் பலர் எஸ்பிஐ வங்கி கணக்கை பயன்படுத்துவதை நிறுத்தினர். அதன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.