திருவனந்தபுரம்
வரும் சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகை தினங்களில் ஊரடங்கு கிடையாது என கேரள் அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகக் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 23,676 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்தம் 34,49,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 17,104 பேர் உயிரிழந்து 32,58,310 பேர் குணமடைந்து நேற்று வரை 1,73,221 பேர் சிகிச்சையில் இருந்தனர்.
இதையொட்டி கேரள மாநில அரசு ஊரடங்கைக் கடுமையாக்கி உள்ளது.. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கட்டுப்பாடுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 22 ஆம் தேதி கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகிறது.
மேலும் வரும் 15 ஆம் தேதி அன்று சுதந்திர தினம் நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது. எனவே கேரள மாநில அரசு வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றும், ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டும் ஊரடங்கு கிடையாது என அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]