டெல்லி: ‘சி.பி.ஐ., அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ‘ஜீன்ஸ் பேன்ட், டி – ஷர்ட் போன்வற்றை அணியவும் முகத்தில் தாடி வைக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த வாரம் பதவி ஏற்ற புதிய இயக்குனர் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., அமைப்பின் 33வது இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த வாரம் பதவியேற்றார். இவர், சி.பி.ஐ., உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நிர்வாக ரீதியாக மாற்றங்களை அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் சிபிஐ அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முறையாக அலுவலகத்தில் ஆடை அணிய வேண்டும், ஜீன்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூக்கள், சப்பல்கள் மற்றும் சாதாரண உடைகள் அணியக்கூடாது. தாடி வைக்கக்கூடாது.
சிபிஐயில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் புடவை, சூட், சாதாரண சட்டை மற்றும் கால்சட்டை மட்டுமே அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு இந்த விதிகள் பயன்படுத்தப்படும் மற்றும் வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய கிளைத் தலைவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.