கொழும்பு: கொழும்பு கிழக்கு சரக்கு கொள்கலன் முனையத்தை ( ECT) இந்தியா உதவியின்றி உருவாக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு சரக்கு கொள்கலன் முனையத்தை (ECT – East Container Terminal) கூட்டாக மேம்படுத்த இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இந்த கிழக்கு சரக்கு கொள்கலன் முனையம், கொழும்புவில் உள்ள சீனாவினால் நிதியளிக்கப்படும் சர்வதேச நிதியியல் நகரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இது துறைமுக நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த கிழக்கு சரக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெறும் பரிமாற்றத் தொழிலில் (வணிகப் பரிமாற்றம்) 70 சதவிகிதத்திற்கும் மேல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என ஒப்பந்ததத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும், கொழும்பு நகரில் உள்ள மேற்கு துறைமுகத்தை இந்தியாவுடன் சேர்ந்து விரிவாக்கம் செய்ய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.
இந்த நிலையில், தற்போது, இந்தியாவின் பங்களிப்பு இன்றி இலங்கையே கிழக்கு சரக்கு கொள்கலன் முனையத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட இலங்கை, கொழும்பு துறைமுகத்தில் மூலோபாய கிழக்கு கொள்கலன் முனையத்தை (இ.சி.டி) சொந்தமாக உருவாக்க முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிற்கு சாத்தியமான முதலீடுகளுக்கு வழங்கும் என்று என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிழக்குத் துறைமுகத்தின் மொத்த பொறுப்பும் இலங்கை துறைமுகப்பொறுப்பு கழகத்திடமே இருக்கும். இத்திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.