டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை. அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம், அவர்கள் வழக்கின் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து .உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், பாராளுமன்றம்/சட்டமன்றத்தில் வாக்கு/பேச்சு தொடர்பாக லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு எம்.பி அல்லது எம்.எல்.ஏ வழக்கிலிருந்து விடுபட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 1998 ஆம் ஆண்டு பி.வி. நரசிம்ம ரோவா தீர்ப்பு வழக்கை நிராகரித்தது, இது பாராளுமன்றத்தில் வாக்களிப்ப தற்காக வழக்குத் தொடுப்பதில் இருந்து லஞ்சம் வாங்குவதில் இருந்து எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்களுக்கு விலக்கு அளித்தது. தறபோது, அரசியல் சாசனப்படி,  நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவதற்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பேச மம்தா கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. மஹுவா மொய்ரா என்பவர், ஆளும் பாஜக அரசை விமர்சிக்கும் வகையில், நாடாளுமன்ற அவையில் உண்மைக்கு புறப்பான குற்றச்சாட்டுக்களை பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். விசாரணையில்,  மஹுவா மொய்ரா  மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. மேலும் பிரதமர் நரேந்திர மோடியை  தொழிலதிபர் அதானியுடன் இணைத்தும் விமர்சித்து வந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால்,  மம்தா கட்சிஎம்.பி.யான  மஹுவா மொய்ரா, இதுபோன்ற உண்மைக்கு புறம்பான கேள்விகளை எழுப்ப, பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பல கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும்மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை,  மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் அம்பலப்படுத்தினார்.  இதனால், மம்தா கட்சியின் நடவடிக்கை கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதுபோல, பெண் எம்.பி மஹுவானின் நடவடிக்கையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதுதொடர்ந்து, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக பாஜக எம்பி வினோத்குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. கடந்த நவம்பர் 9-ம் தேதி நெறிமுறைகள் குழு தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதுதொடர்பாக  சுமார் 30 நிமிட விவாதத்துக்குப் பிறகு மொய்த்ராவின் எம்பி பதவியை பறிப்பது தொடர்பான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்ததி  நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி அதிகாரபூர்வமாக பறிக்கப்பட்டது.

இதற்கிடையில், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 7நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.  விசாரணையின்போது, எம்.எல்.ஏ.க்களை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டிலிருந்து அரசியல் சாசனம் பாதுகாக்கிறதா? என்று கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை. அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு  தெரிவித்துள்ளது. 1998-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தொடர்பான வழக்கின்  தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம், எம்.பி/எம்.எல்.ஏக்கள் குற்றவியல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

ந்த தீர்ப்பை வாசித்த உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூட்,  லஞ்சம் என்பது நாடாளுமன்ற சிறப்புரிமைகளால் பாதுகாக்கப்படவில்லை என்றும், 1998 தீர்ப்பின் விளக்கம் அரசியலமைப்பின் 105 மற்றும் 194 வது பிரிவுகளுக்கு முரணானது என்றும் கூறினார்.  “சட்டமன்றத்தில் வாக்கு அல்லது பேச்சு தொடர்பாக லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு எம்.பி./எம்.எல்.ஏ வழக்குத் தொடரப்படுவதிலிருந்து விலக்கு பெற முடியாது” என்று ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ஊழல் அல்லது லஞ்சம் பொது வாழ்வில் நன்னடத்தையைக் குறைக்கிறது மற்றும் லஞ்சம் வாங்குவது குற்றமாகும் என்றும்,  “நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் செயல்பாட்டிற்கு தொடர்பில்லாத சலுகைகளை வழங்குவது, நாட்டின் சட்டத்தின் செயல்பாட்டிலிருந்து சரிபார்க்கப்படாத விலக்குகளை அனுபவிக்கும் ஒரு வகுப்பை உருவாக்க வழிவகுக்கும்” என்று கூறியது.

“ராஜ்யசபா அல்லது ஜனாதிபதி/துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்களும், பார்லிமென்ட் சிறப்புரிமைக்கு பொருந்தும் அரசியலமைப்பு விதிகளின் வரம்பிற்குள் வரும்,” என்றும்  உச்ச நீதிமன்றம் கூறியது.

இதுகுறித்து கூறிய பிரபல வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய், “உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, எம்.பி., கேள்வி கேட்கவோ, ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கவோ பணம் வாங்கினால், அவர்கள் வழக்கிலிருந்து விடுபட முடியாது என்று கூறியுள்ளது. லஞ்சம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்பது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை அழித்துவிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது” எனத் தெரிவித்தார்.