டில்லி:

ஜி.எஸ்.டி.யால் குழந்தைகள் கல்வி பாதிக்காது என்ற கருத்து தற்போது பொய்யாகியுள்ளது. கல்வி சேவை வழங்கும் பல நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி.யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் புத்தக பை, ஓவியப் புத்தகம், நோட்டு போன்றவை விலை குறைந்துள்ளது. ஆனால், பல வழிகளில் கல்வி கட்டணம் ஜிஎஸ்டி.யால் அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான மாணவர்ள் தங்களது கல்விக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் மீதான வரி விதிப்பு இதற்கு ஒரு காரணமாக அமை ந்துள்ளது. பள்ளிகளில் செக்யூரிட்டி, போக்குவரத்து, கேட்டரிங், ஹவுஸ்கீப்பிங் போன்றவை மூன்றாம் நபரிடம் இருந்து சேவைகளை பெறுகின்றன. இதற்கு தற்போது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்த தொகை மாணவர்களின் கல்வி கட்டணத்தில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இந்த சேவைகள் ப்ரீ கே.ஜி முதல் உயர் கல்வி அல்லது இதற்கு சமமான கல்வி பெறுவோருக்கும் அளி க்கப்படகிறது. இதில் உயர்கல்வி நிறுவனங்கள் அளிக்கும் இத்தகைய சேவைக்கு வரி விதிக்கப்படுகிறது. இது தவிர லாண்டரி, விடுதி மெஸ் சாப்பாடு, மருந்துகள், எழுது பொருட்கள் உள்ளிட்ட இதர சேவைகள், பொருட்கள் பள்ளி வளாகத்தில் தான் மாணவர்கள் பெற வேண்டிய நிலை உள்ளது. இதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இது போன்ற சேவைளுக்கு கடந்த 2012ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்ட 3 சதவீத வரி 2017ம் ஆண்டு ஏப்ரலில் திரும்ப பெறப்பட்டது. உதாரணமாக ஒரு மாணவர் ஒரு பாடப்பிரிவுக்கு ரூ. 1 லட்சம் கல்வி கட்டணம் செலுத்தினால் ரூ. 3 ஆயிரம் வரி செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி அமலுக்கு பின் இந்த தொகை ரூ. 15 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்கள் பல ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் வளாக பாதுகாப்பு க்கு தனியார் செக்யூரிட்டிகளை பணியமர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு லட்சக்கணக்கான ரூபாய்களை கல்வி நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. இந்த தொகை தற்போது 18 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது கண்டிப்பாக மாணவர்களின் தலையில் தான் சுமத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பாரம்பரிய பாடப்பிரிவுகளுக்கு ஜிஎஸ்டி குழு விலக்கு அளித்துள்ளது. வழக்கத்தில் இல்லாத பாடப்பிரிவுகள், சான்றிதழ் பாடப்பிரிவுகள், பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றுக்கு 14 முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்ப டுகிறது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கு ஜிஎஸ்டி வதிக்கப்படுகிறது.

தொழில் முறை கல்விக்கான கட்டணம் ரூ. 10 லட்சம் என்றால் அதற்கு ரூ. 1.8 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இது ஏற்கனவே ரூ. 1.4 லட்சமாக இருந்தது. இன்ஜினியரிங் போன்ற தொழில் கல்விக்கான பயிற்சி நிறுவனங்களுக்கு 15 சதவீத வரி செலுத்தும் நிலை இருந்தது. தற்போது 18 சதவீத ஜிஎஸ்டி வதி க்கப்படுகிறது. இதனால் ரூ.1.18 லட்சம் செலுத்தி வந்த மாணவர்கள் தற்போது கூடுதலாக ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.