டில்லி,

‘கோவில், மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அது தயார் செய்ய பயன்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி உண்டு கூறியுள்ளது. இதன் காரணமாக பிரசாதங்களுக்கு மறைமுகமாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

வழிபாட்டுத் தலங்கள், மத அமைப்புகள் சார்ந்த அன்னதானகூடங்களில் வழங்கப்படும் அன்ன தானம், பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி., உண்டு என, தவறாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையல்ல.

இதற்கு, ஜி.எஸ்.டி., கிடையாது.ஆனால் இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் இடு பொருட்களான சர்க்கரை, சமையல் எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி., உண்டு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலப்பொருட்கள் இல்லாமல் எந்தவொரு பிரசாதமும் யார் செய்ய முடியாது. அப்படி இருக்கும் போது, பிரசாதங்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்று மத்திய அரசு கூறி வருவது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால் பெரும்பாலான இந்துக்கோவில்களில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கலுக்கு  ஜிஎஸ்டி கிடையாது.

ஆனால், அது தயார் செய்ய தேவைப்படும் அரிசி, சர்க்கரை, நெய், முந்திரி போன்ற போருட்களுக்கு வரி உண்டு.

இப்படி மத்திய அரசு கூறி  இருக்கும்போது, மூலப்பொருட்கள் இல்லாமல் எப்படி பிரசாதம் செய்வது என்று கேள்வி எழுப்புகிறார்கள்..