புதுடெல்லி:
UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டமில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக மாறிப்போன, கூகுள் பே போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க தற்போது ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது என்று தகவல் வெளியாகி இருந்தது. யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும், ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாக வெளியான தகவலுக்கு நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.