ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தில் ரயிலின் பைலட் மற்றும் துணை பைலட் உள்ளிட்ட 17 பேர் மரணமடைந்தனர்.
இந்த ரயில் விபத்திற்கு பைலட் மற்றும் துணை பைலட் இருவரும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டே கவனக்குறைவாக ரயில் ஓட்டியது தான் என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா கூறியிருந்தார்.
இந்த நிலையில் விபத்தில் மரணமடைந்த அந்த இருவருவர் உள்ளிட்ட பிற ரயில்வே ஊழியர்களின் மொபைல் அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டா ஆகியவற்றை ஆய்வு செய்ததில் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கவில்லை என்று ரயில்வே துறை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் பைலட் மற்றும் துணை பைலட் மீது ரயில்வே அமைச்சர் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டால் கருணை அடிப்படையில் பணியில் உள்ள அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது என்று கூறப்படுகிறது.