டில்லி,
பாரதியஜனதா கட்சிக்கு வரப்பெற்றுள்ள நன்கொடைகளில் சுமார் 2125 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இது மொத்த நிதியில் 65 விழுக்காடு ஆகும்.
இது கருப்பு பணமா? என கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சபை கூறியிருப்பதாவது,
இந்தியாவில் அரசியல் கட்சியின்ர கடந்த 10 ஆண்டுகளில் 11,367 கோடி ரூபாய் கட்சிக்கு நிதியாக பெற்றுள்ளனர். இதில் 7800 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், தற்போது இந்தியாவை ஆண்டுவரும் பாரதியஜனதா கட்சியில் 2,125 கோடி ரூபாய் நிதிக்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது பிஜேபியின் மொத்த கட்சி நிதியில் 65 சதவிகிதம் ஆகும்.
இந்த கடந்த 2004-05ம் ஆண்டிலும், 2014-15ம் ஆண்டிலும் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிப்பதாக கூறி பணமதிப்பிழப்பு செய்தது மத்திய அரசு. ஆனால், பாரதியஜனதா கட்சியிலேயே 2125 கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது கருப்பு பணமா? என கேள்வி எழும்பியுள்ளது.