சென்னை

சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மிகப் பெரிய உயிரியல் பூங்காவான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் உள்ளன.   தமிழகத்தில் கடுமையாக பரவிய கொரோனா தொற்றால் சிங்கங்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.  இதை மறுத்து இன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள அனைத்து சிங்கங்களுக்கும் நாசி மற்றும் மலக்குடல் திரவ மாதிரிகள் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.   அந்த சோதனையில் எந்த ஒரு சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

எனவே அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களில் எந்த ஒரு சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் அவை அனைத்தும் நலமாக உள்ளதாகவும் அறிக்கையில் தெரியப்பட்டுள்ளது.   இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வன உயிரின மருத்துவக் குழு சிங்கங்களின் உடல்நிலையை அனைத்து நேரமும் கண்காணிப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.