சென்னை:

ட்டசபையில் இன்று திமுக எம்எல்ஏவின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தபோது என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பாஜகவுடன்  எங்களுக்க கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை என்றும் கூறினார்.

இன்றைய சட்டசபை விவாத நேரத்தின்போது, திமுக எம்.எல்.ஏ பிச்சாண்ட, மத்திய அரசுடன் நட்புறவுடன் இருந்துவரும் தமிழக அரசு காவிரி விவகாரத்தில் பொதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி, தி.மு.க. இதற்கு முன்பு பா.ஜ.க கூட்டணியில் இருந்தபோது  என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும்,  பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை. காவிரிக்காக நாங்கள் வேண்டிய அனைத்து நடவடிக்கை களையும் எடுத்து வருகிறோம். நமது எம்.பி.க்கள் அதற்காக நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் என்றார்.

ஆந்திர மாநில எம்.பிக்கள் அவர்கள் மாநில பிரச்சினைக்காக மட்டுமே மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள் என்று பேசிய முதல்வர், அவர்கள் காவிரிக்காக நமக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

காவிரி பிரச்சினைக்காக யாரும் நமக்காக குரல் கொடுக்கவில்லை. அதனால்தான் காவிரி பிரச்சினைக்காக நமது எம்.பி.க்கள் அழுத்தம் தந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கு வகையிலே இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.