திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழக்கப்படும் என்றும், குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படாது என்றும், பெக்ளுக்கு மாதம் ரூ.2000 ஊதியம் வழங்கப்படும் என்று என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.
தமிழகம், அஸ்ஸாம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன் றதேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அஸ்ஸாமில், 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளில் ஏப்ரல் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தற்போது அங்கு தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர், அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேஜ்பூர் என்ற இடத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரியங்கா, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ,
மாநிலம் முழுவதும் பெண்களுக்கு மாதம் ரூபாய் 2000 ஊதியம் வழங்கப்படும்
25 லட்சம் தனியார் துறை வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் எ
மாதம் 200 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்
சாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்வோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். பிரியங்காவின் அதிரடி அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னதாக அஸ்ஸாமின் பிரிசித்தி பெற்ற காமாயாக்னி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிரியங்கா, தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்தும், அவர்களுடன் நடனமாடியும் மகிழ்ந்தார்.