மும்பை: ரெப்போ வட்டி விகிதம் தற்போதுள்ள 6.5%ஆக தொடரும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 10வது முறையாக மாற்றமின்றி நீடிப்பதால் வீடு, வாகன கடன்களின் வட்டி உயரும் வாய்ப்பு இல்லை. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து 9-ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது. மத்திய வங்கி 2023 பிப்ரவரியில் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதத்திற்கு உயர்த்தியது, அதன் பின்பு இன்று வரையில் எவ்விதமான மாற்றமும் இல்லை. 10வது முறையாக மாற்றமின்றி தொடர்கிறது.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழுவின் 2 நாள் கூட்டம் இன்று முடிந்துத. ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழுவில் 3 ஆர்பிஐ ஊழியர்கள் மற்றும் 3 வெளிப்புற உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் உள்ளனர். சமீபத்தில் ராம் சிங், நாகேஷ் குமார் மற்றும் சௌகதா பட்டாச்சார்யா ஆகியோர் குழுவில் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவே இந்தியாவின் ரெப்போ வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை வகிக்கிறது. இதைத்தொடர்ந்து, 2 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரெப்போ விகிதத்தில் 10வது முறையாக மாற்றமில்லை, ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடரும் என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்.
ரெப்போ விகிதம் மாற்றமில்லாத காரணத்தால் வீட்டுக் கடன், வாகன கடன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றம் இருக்காது. மக்கள் வாங்கிய கடனின் ஈஎம்ஐ உயராது.
ரெப்போ விகிதத்தை மாற்றாமல் பழைய நிலையைத் தக்க வைத்துக் கொண்டாலும், நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. CPI பணவீக்கம் மூன்றாம் காலாண்டில் சராசரியாக 4.7% ஆகவும், நான்காவது காலாண்டில் 4.3% ஆகவும் இருக்கும் என்று ரிசர்வ்வ வங்கி இப்போது எதிர்பார்க்கிறது, இது முந்தைய மதிப்பீட்டை விட சற்று அதிகமாகும்.
இருப்பினும், பணவீக்கம் படிப்படியாக அதன் இலக்கான 4% உடன் +/- 2% வரம்பிற்குள் சீரமைக்கும் என்று RBI நம்பிக்கை கொண்டுள்ளது. ரெப்போ விகிதத்திற்குக் கூடுதலாக, ரிசர்வ் வங்கி எஸ்டிஎஃப் விகிதத்தை 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி (எம்எஸ்எஃப்) விகிதம் மற்றும் வங்கி விகிதத்தை 6.75% ஆகவும் வைத்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக, RBI தனது நிலைப்பாட்டை நடுநிலைக்கு மாற்றும் அதே வேளையில் ரெப்போ விகிதத்தைப் பராமரிக்கும் முடிவு, பணவீக்கத்தில் ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியானது மேக்ரோ பொருளாதார வளர்ச்சிகளை நெருக்கமாகக் கண்காணித்த பின்பே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.