நாமக்கல்: தமிழகத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பே இல்லை என்று தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தைத் திறப்பதற்காக கட்டிட கட்டு மானப் பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இரவு, பகலாகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனை கட்டிட முன்பகுதி கான்கிரீட் தளம் (போர்டிகோ) நேற்று (அக்டோபர் 30ந்தேதி) காலை 6 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை வேளை என்பதால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தங்கமணியும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “போர்டிகோ கட்டுவதற்காக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு இருந்தது. அதற்காக வைக்கப்பட்ட கம்புகள் சரியான முறையில் இல்லாததால் பொறியாளர்கள் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனால்தான் அது இடிந்து விழுந்தது. மற்றபடி வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. இதில் யாருக்கும் காயம் இல்லை” என்றார்.

மேலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், பள்ளிபாளையத்தில் வீட்டில் திடீரென பட்டாசு வெடித்து விபத்தில் இருவர் உயிரிழந்ததால், அவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்ட பிறகே கோபுரம் அமைக்கப்படும். உடனடியாக நிவாரணம் வழங்க அம்மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிய பிறகே, விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை பெய்ததால் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி இரவு நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது, மழை நின்றவுடன் மின்சாதனங்களில் பழுது ஏற்பட்டால் பழுது நிக்கி மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்தடை இல்லை. தமிழகத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பில்லை. உயர்த்தப்பட மாட்டாது என ஏற்கனவே தெரிவித்து விட்டோம் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.