பழனிமலை அடிவாரத்தை சுற்றியுள்ள கிரிவல பாதையில் இஸ்லாமிய மற்றும் பிற மதத்தை சேர்ந்தவர்களாலும் நடத்தப்பட்டு வரும் இறைச்சி கடைகள் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் அவர்களது நம்பிக்கையையும் அவமானப்படுத்தும் விதமாகவும் விரோதத்தை உருவாக்கும் விதமாகவும் உள்ளது என கூறி அந்த கடைகளை நீக்க அதிகாரிகளுக்கு ஆணையிடுமாறு வந்த பொதுநல வழக்கு மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்து மதம் முன்னேற்றக் கழகத்தின் பிரசிடென்ட் மற்றும் ஒரு பயிற்சி வழக்கறிஞராக உள்ள மனுதாரர் (கட்சியின் நபர்) பழனி மலைய சுற்றியுள்ள இடம் கிரிவலப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது என்று வாதிட்டார். பல நாட்களாக விரதம் இருந்து இந்து மத பக்தர்கள் கிரிவலப்பாதையைச் சுற்றி வருவார்கள். ஆனால் கோயில் நிலத்தில் கிரிவலப்பாதையிலுள்ள இஸ்லாமியம் மற்றும் பிற மதத்தை சேர்ந்த மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகளை கடக்க பக்தர்களுக்கு கஷ்டமாகவுள்ளது. அத்தகைய கடைகளில் உள்ளவர்கள் கண்மூடித்தனமாக மாட்டிறைச்சி மற்றும் அசைவ உணவுகளை பழனி மலை படிகளில் உட்கார்ந்து பயன்படுத்தி இதனால் பழனி இந்துக்களின் சமய நம்பிக்கையை அவமானப்படுத்துகிறார்கள். இந்த உண்மைகளை பரிசோதித்து பார்க்கவில்லையெனில், மத விரோதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறினார். மேலும் அவர் மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் கிரிவலப்பாதையை ஆக்கிரமித்து அசைவ உணவு உண்டு இந்து மத பக்தர்களுக்கு தொந்தரவு கொடுப்பது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் வாதிட்டார்.
எஸ்.மணிகுமார் மற்றும் சி.டி.செல்வம் உள்ளிட்ட நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் அவருடைய வாதங்களை பின்வருமாறு கூறி நிராகரித்தனர்; “கோவில் நிலத்திலுள்ளா கிரிவலப்பாதையை இஸ்லாமியம் மற்றும் பிற மதத்தை சேர்ந்த மக்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்ற மனுதாரரின் வாதத்தை ஒரு சிறு ஆதாரத்தின் மூலம் கூட நிரூபிக்கவில்லை. மற்ற மதத்தை சேர்ந்த மக்கள் கோவில் நிலத்தில் எந்த கடைகளும் போட முடியாது என்பதற்கு மனுதாரரிடம் ஆதாரங்களே இல்லை.”
“கடைகளில் வசிப்பவர்கள், பழனி மலை படிகளில் உட்கார்ந்து கண்மூடித்தனமாக மாட்டிறைச்சி மற்றும் பிற அசைவ உணவு சாப்பிட்டு இந்துக்களின் மத நம்பிக்கை அவமதித்தப்பதாகவும் மற்றும் அதை இறுதியில் சோதிக்கவில்லை என்றால் அது விரோதத்திற்கு வழிவகுக்கும், என்ற மற்ற கருத்திற்கும் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அசைவ உணவு சாப்பிடுவதன் மூலம் அவர்கள் இந்து மதம் பக்தர்களுக்கு கோளாறுகளை உருவாக்கியதாக கூறப்பட்டுள்ள மற்றொரு கருத்தும் உறுதிப்படுத்தும் வகையில் இல்லை “.
“அசைவ உணவு உண்ணுவது ஒரு குற்றமாகும் என்று இந்திய பீனல் கோடில் எங்கும் கூறப்படவில்லை என்றும்; எந்தவொரு மதத்தின் உணவு உண்ணும் பழக்கத்தைப் பற்றியும் சட்டத்தில் கூறப்படவில்லை என்பதால் மாட்டிறைச்சி உண்பதை குற்றமென கூறும் மனுதாரரின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது ” என்றும் நீதிமன்றம் கூறியது.